அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் கைது.

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளுடன் மாட்டு வண்டியில் சென்ற நால்வர் இன்று (19) பிற்பகல் பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாகால்லே பாலத்திற்கு அருகில் இருந்து காலி நகருக்குள் நுழைய முற்படும் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நான்கு பேரில் காலி மாவட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவரின் மகனும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை காட்சிப்படுத்திக் கொண்டு ஒரு மாட்டு வண்டியில் காலி நகரை நெருங்கும் போது பயணக்கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலாபிட்டி பகுதியில் உள்ள ஒருவரிடமிருந்து குறித்த மாட்டுவண்டி வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காலி பொலிசாரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.