பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் மீண்டும் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமளில்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வௌியிட்ட அறிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் உறுப்பினர்கள் அனைவரினதும் நிலைப்பாடு கம்மன்பில பதவி விலக வேண்டும் என்பதே என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன மக்கள் பிரச்சினையின் போது மக்கள் பக்கமே இருக்கும் எனவும் அச்சமின்றி செயற்படும் எனவும் அவர் கூறினார். 

கட்சிக்காக மாத்திரமன்றி கட்சியின் உறுப்பினர்களது பக்கம் தான் நிற்பதாகவும் அதனால் கம்மன்பில தொடர்பில் விடுத்த அறிக்கையை மீளப் பெறப்போவதில்லை எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். 

பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.