நீதி அமைச்சருக்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் குழுவினருக்கும் இடையே நடந்த முக்கிய கலந்துரையாடல்.

2021.06.15 ஆம் திகதி (இன்று) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் சிலர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களை அன்னாரின் காரியாலயத்தில் காலை 10.00 மணி அளவில் சந்தித்து முஸ்லிம்களின் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலும், ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசித்தனர்.

இக்கலந்துரையாடலுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அதன் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம் கலீல், உதவி பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்ததோடு, இதன் மூலமாக நம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் நலவுகள் உண்டாக வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கின்றோம்.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.