கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்புகள் - வர்த்தமானியும் வெளியானது.

முதலாவது அறிவிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் பாடப்புத்தகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய காலங்களில் கல்வியமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துவருவதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

இதனை கருத்திற்கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவும் பொருட்டு, அவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, அனர்த்தங்களால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் புதிய பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்விமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களின் பெற்றோர், தமது பிள்ளைகளின் பாடசாலை அதிபரிடம் உறுதிப்படுத்தல் கடிதத்தை பெற்று, அதனை வலயக் கல்வி பணிமனை ஊடாக கல்வியமைச்சுக்கு அனுப்புவதன் மூலம் புதிய பாடப்புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டாவது அறிவிப்பு

அடுத்த வருடம் முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

எதிர்வரும் 30ஆம் திகதியுடன் குறித்த காலம் நிறைவடையவிருந்தது.

எனினும், தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை கையளிப்பதற்கான காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதறற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் கையொப்பத்துடன்  வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் அடிப்படையில், வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதாக, வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தின் ஊடாக வியாபாரக் கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியற் கற்கைகள் ஆகிய பிரிவுகளில் உயர்கல்வி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.