நாடு எப்போது வழமைக்கு திரும்பும்?

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையான முறையில் அனைத்து துறைகளிலும் செயற்படுத்துவதற்கு முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவே ஜீலை மாதம் முதல் வாரத்திலிருந்து நாடு வழமை நிலைக்கு திரும்பும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தடுப்பூசி வழங்கல் மூலமாக 2021 ஆம் ஆண்டின் முடிவிற்குள் அல்லது 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் அனைத்து மக்களையும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு எதிர்பார்க்கிறோம். கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் மற்றும் இரண்டாம் அலையைத் திறம்பட எதிர்கொண்ட நாம், இப்போது அதன் மூன்றாவது அலையையும் வெற்றிகரமாக முறியடிக்கும் நிலையை அண்மித்திருக்கின்றோம் என இராணுவத்தளபதியும் கொவிட் - 19 கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு தொடர்பான தேசிய மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் 2023 வரை நீடிக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் ஆனால் இதுவரை தங்களை பாதுகாப்பதிலேயே அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளிற்கு சிகிச்சை வழங்குவதற்காக 300 சிகிச்சை நிலையங்களை அமைக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாற்றமடைந்த வைரஸ்கள் உருவாகக்கூடும் என்பதால் வைரசினை எதிர்கொள்வதற்கான அடிப்படைகளை உருவாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக அரசாங்கம் கொரோனாவைரஸ் குறித்து கவனம் செலுத்தவேண்டும், அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசியல்மயப்படுத்தவேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.