தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவருக்கும், கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள், அடுத்தவாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான, தொழில் ஒப்பந்தம், விசா அனுமதிப்பத்திரம், தொழில் நியமனக் கடிதம் முதலான ஆவணங்களைக் கொண்டுள்ளவர்களே, தடுப்பூசி ஏற்றத்திற்கு தகைமை உடையவர்களாவர்.
அனுமதிப்பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஊடாக வெளிநாடு செல்ல உள்ளோர், அந்த முகவர் நிறுவனம் மூலமாகவும், தனிப்பட்ட முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வோர் பணியகத்தை தொடர்புகொண்டும், தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறியப்படுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1989ஐ அழைக்குமாறும் பணியகம் அறிவித்துள்ளது.
Post a Comment