முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தொடர்பாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்த விடயம்.

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அசாத் சாலி தாக்கல் செய்த மனு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று (28) பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம்.டீ நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனையடுத்து குறித்த மனு மீதான விசாரணை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.