பெட்ரோல் விலை ஏற்றத்தின் “பிரபல்யமாகாத தீர்மானத்தை” எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்துவதை கண்டிப்பதாக ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் 08 பங்காளிக் கட்சிகள் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு காரணம், எரிபொருள்களின் விலையேற்றம் குறித்த தீர்மானம் ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் தோளில் மீது சுமத்துவதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் நேற்று ஜனாதிபதி ஊடகப் பிரிவினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ வித்தாரண மற்றும் எம்.பிக்களான அத்துரலிய ரத்ன தேரர், ஏ.எல்.எம். அத்தாவுல்லா, முன்னாள் எம்.பியான டிரான் அலஸ், மற்றும் ஜி. வீரசிங்க (ஸ்ரீ லங்கா கொமினியூஸ்ட் கட்சி), அசங்க நவரத்ன ( ஸ்ரீ லங்கா மஹஜன கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
Post a Comment