யானை பலத்துடன் மீண்டும் ரணில் பாராளுமன்றத்திற்கு; வெளியாகிறது அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு.

ஐக்கிய தேசியக் கட்சி தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள அக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் எதிர்வரும் 18 ஆம்திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனை பெற்றிருக்கவில்லை.

எனினும், கட்சி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் அக்கட்சி ஒரு தேசியப்பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் சுமார் 9 மாதங்களின் பின்னர் கட்சித்த தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.