எரிபொருள் விலை உயர்வுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு முடிவை மொட்டு அரசு எடுத்துள்ளமை வெட்கக்கேடாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்கு ஏற்றவகையில் தங்களால் இந்த நாட்டை ஆள முடியாது என்பதை மொட்டு அரசாங்கம் ஏற்கவேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே இந்த நாட்டிற்கு செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வர முடியும் எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment