அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்!

பயணக் கட்டுப்பாடு நிலைமையின் கீழ், அத்தியாவசிய பொருட்களின் விநியோக சேவைகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூன் 21ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டினார்.

மீன், இறைச்சி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள குறித்த அனுமதிப்பத்திரத்தை, உரிய பிரதேசத்தில் மாத்திரம் தமது சேவைகளை மேற்கொள்ள பயன்படுத்த முடியுமென அவர் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக வழங்கப்பட்ட இவ்வனுமதிப்பத்திரங்களை தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.