மாவனல்லையில் புதையுண்டோரின் இடத்தை காட்டிய வளர்ப்பு நாய்!

மாவனல்லை, தெவனகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நான்கு பேர் புதையுண்டு இறந்த சம்பவம் நேற்று பதிவானதல்லவா?

மண்ணுக்குள் சிக்கி இறந்தவர்களை மீட்க இராணுவமும் ,மீட்புப் பணியாளர்களும் போராடிக்கொண்டிருக்கும்போது ,மண்ணுக்குள் புதையுண்டோர் வளர்த்த நாய் சம்பவ இடத்திற்கு வந்து தடுமாறிக்கொண்டிருந்தது.

மீட்புப் பணியாளர்கள் அதனை விரட்டியபோதும் அவ்விடத்தை விட்டு நாய் அகலவில்லை.இறுதியில் நாய் முகர்ந்த இடத்தை மீட்பு பணியாளர்கள் தோண்டியபோது அங்கு சேற்றுமணலுக்குள் நால்வரின் உடல்களும் புதையுண்டு கிடந்ததை கண்டறிந்து அவற்றை மீட்டனர்.

வளர்ப்பு நாயின் இந்த செயல் குறித்து அந்த பகுதியெங்கும் ஆச்சரியமாக பேசப்படுகிறது.இந்த நாயை பொறுப்பேற்று வளர்க்க அந்த மக்களில் பலர் முன்வந்துள்ளனர்.

படப்பிடிப்பு – பிரதீப் குமார தர்மரத்ன

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.