கொழும்பின் மற்றுமொரு பகுதியில் கொவிட் டெல்டா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாதிவெல – பிரகத்திபுர பகுதியில் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கொழும்பு – தெமட்டகொடை பகுதியில் ஏற்கனவே 5 கொவிட் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள பின்னணியிலேயே, இன்று மற்றுமொரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Post a Comment