நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை அடுத்தவாரத்தில் நடைபெறவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த ஒரு மாதகாலமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாகேவே இன்று நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை விட குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய நிலையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
எனினும் வருகின்ற 05ஆம் திகதிவரை நாட்டின் நிலைமையை அவதானித்து மக்கள் செயற்படக்கூடிய விதம் பற்றி சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருக்கின்ற நிலையில், அதன் பின்னரே மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment