நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை மேலும் நீடிக்கப் படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்ககாக நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது தொடர்ந்தும் நீடிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்துரைத்த போதே, இராணுவத்தபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்படும் என, அவர் அறிவித்துள்ளார்.
Post a Comment