அரிசி விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

அரிசி விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காணப்பட்டதை விடவும் தற்போது 10 முதல் 25 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும், மக்கள் பெருமளவு பயன்படுத்தும் அரிசி வகைகளின் விலை அதை விடவும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு மற்றும் வெள்ளையரிசியின் விலை 120 ரூபாவிலிருந்து 128 ரூபா வரையிலும், நாட்டரிசி ஒரு கிலோகிராம் 125 முதல் 135 ரூபா வரையிலும், சம்பா ஒரு கிலே 155 ரூபாவிலிருந்து 170 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தோடு கீரி சம்பா ஒரு கிலோகிராம் 220 ரூபாவிலிருந்து 230 ரூபாவாக அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொலனறுவை பிரதான அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நேற்றைய நாள் (16) நிலவரப்படி சம்பா ஒரு கிலோகிராம் 147 மற்றும் 150 ரூபாவாகவும், நாடு ஒரு கிலோகிராம் 117 மற்றும் 120 வரையும், கீரி சம்பா அரிசியின் விலையானது 220 ரூபாவாகவும், வெள்ளை மற்றும் சிவப்பரிசி ஆகியவற்றின் விலையானது 112 மற்றும் 115 ரூபாவாகவும் விலை நிலவரம் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் விலை நிர்ணய விலையை விடவும் சில இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு கிலோ சிவப்பரிசி 93 ரூபாவுக்கும் நாட்டரிசி 96 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக சதொச நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

சதொசவில் சம்பா அரிசி இல்லையெனவும் மூன்று வகையான அரிசிகள் மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், பெரும்பாலான சதொச நிறுவனங்களில் குறித்த விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.