ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் விடுக்கப்பட்ட வலியுறுத்தல் தொடர்பில் இன்று பதில் வழங்கப்படும் எனவும், இதற்காக ஊடகவியலாளர் மாநாடொன்று பிற்பகல் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும். என்று அரசின் தலைமைக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பிரச்சினையால் மக்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் அவர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. இவ்வாறானதொரு அதிகரிப்பை செய்திருக்கவும் கூடாது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கம்மன்பிலவை பதவி விலகுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர் வழங்கவுள்ள பதிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment