பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றும் அதன் மரணங்களும்.

எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினமும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதற்கமைய, இன்றைய தினம் இதுவரையில் 3,264 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 195,811 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 1,683 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162,397 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,608 ஆக அதிகரித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.