நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனைய தரப்பினருக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
எனினும், மனிதநேய அடிப்படையில் நெருங்கி உறவினர்களின் மரண சடங்குகளில் கலந்துக்கொள்வதற்கு மாத்திரம் மாகாண எல்லையை கடக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் கூறுகின்றார்.
எனினும், சோதனை சாவடிகளில் அதற்குரிய சரியான ஆவணங்களை சமர்ப்பிப்பது அத்தியாவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதைவிடுத்து, பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் மாகாண எல்லையை கடக்க அனுமதி வழங்கப்படாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
Post a Comment