கைமாறப் போகும் எதிர்க்கட்சி தலைவர் பதவி?

அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார். அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று சபையில் எதிர்வுகூறினார்.

அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார். அவர் பாராளுமன்றத்திற்கு வரும் நிலையில் எதிர்க்கட்சியில் இருந்து 15 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூடி அவசர அவசரமாக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி சஜித் பிரேமதாசவே எதிர்க்கட்சி தலைவர் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஆனால் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதிலும் பத்து பேர் ரணிலை ஆதரித்து கையொப்பமிட்டுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் ஒருவார காலமே உள்ளது. சரியாக ஒரு வாரகாலத்தில் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவார். அடுத்த பாராளுமன்ற அமர்வில் ரணில் விக்கிரமசிங்கவே எதிர்க்கட்சி தலைவர். இப்போதும் பிரபல ஹோட்டல் ஒன்றில் முக்கிய சிலர் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிந்துகொண்டேன் என்றார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படபோவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவலாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுவார். எமது கட்சியில் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக தெரிவிப்பது உண்மைக்கு புறம்பானது.

நாட்டில் தற்போது பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றிலிருந்து மக்களின் அவதானத்தை திசைதிருப்புவதற்காக இவ்வாறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இது ராஜபக்ஷர்களின் சூழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் நாம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற வகையில் சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றோம்.

எமது கட்சித்தலைவர் நாட்டில் தற்போதைய நிலைமை , கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நாட்டின் ஆட்சி அதிகாரங்கள் தொடர்பில் சிறந்த விளக்கத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இதேவேளை எமது கட்சி உறுப்பினர்கள் அமைச்சு பொறுப்புகளை பொறுப்பேற்கும் அளவுக்கு தகைமைகளை கொண்டுள்ளனர்.

இன்னுமொருவருக்கு ஆதரவாக செயற்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை. பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ இவ்வாறான இரகசிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளது. ஆனால் எமது கட்சியினர் அதற்கு சிக்கமாட்டார்கள் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.