இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வீட்டில் கடமையில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானதாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, பிள்ளையாரடி பகுதியில் இன்று (21) மாலை 5.10க்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த நபரான டிப்பர் சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நடைபெற்ற போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருக்கவில்லை எனவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.