பயணக்கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க தயாராகிறது அரசாங்கம்!

தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு நடைமுறைகளில் நாளைமுதல் கடும்போக்கை கடைப்பிடிப்பதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பயணக்கட்டுப்பாடு காலத்திலும் அரச மற்றும் தனியார் துறை அலுவலக பணியாளர்கள் வகைதொகையின்றி பயணிப்பது குறித்து கவனஞ்செலுத்தியுள்ள பொலிஸார் ,நாளைமுதல் விசேட நடைமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதன்படி நாளை கொழும்புக்குள் வரும் வாகனங்களுக்கு விசேட ஸ்ரிக்கர்களை ஒட்டும் செயற்பாடு இடம்பெறவுள்ளது. அதேபோல பயணத்தடை காலங்களில் பயணிப்போர் ,அலுவலகங்களின் தலைமை அதிகாரிகளிடம் இருந்து கொண்டுவரும் கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்தும் பொலிசாரின் சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையில் இதர அத்தியாவசிய பொதுச் சேவைகளில் தேவையானவர்களை மட்டும் பணிக்கு அழைக்கும் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட அரசாங்கம் தயாராகி வருவதாக அரச உயர் மட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.