பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவது பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதொரு குற்றமாகும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் தலைமையகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற போலியான தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், கொரோனா பரவலை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு இடையூறாகவும் அமைவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.