பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் வெளியிட்ட கருத்து.

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை திறக்கும் சுகாதார பாதுகாப்பான சூழல் உறுதிப்படுத்தப்பட்டதும் பாடசாலைகள் திறக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ஆயிரம் ரூபா மாத கொடுப்பனவை வழங்கும் குரு அபிமானிசெயற்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான அடித்தளம் முன்பள்ளி பாடசாலைகளில் இருந்து தொடர்கிறது.முன்பள்ளி கல்வி முறைமையினை வைத்தியர் மெரியா மொன்டிசோரி எமது நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார்.

முன்பள்ளி பாடசாலைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள். ஆகியவை பிரதான வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

முன்பள்ளி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுபீட்சமான எதிர்கால கொள்கை திட்டத்தில் பிரத்தியேகமான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்காகவே முன்பள்ளி பாடசாலைக்கென இராஜாங்க அமைச்சு எமது அரசாங்கத்தில் ஸடதாபிக்கப்பட்டது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக முன்பள்ளி பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பள்ளி ஆசிரியர்கள் தமது மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கிடைக்கப் பெறும் குறைந்த வருமானத்தை கொண்டு தங்களின் சேவையினை முன்னெடுத்து செல்கிறார்கள்.

தற்போது அதுவும் இல்லாமல் போயுள்ளது. இதனால் முன்பள்ளி ஆசிரியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்கள் தொழிற்துறை ஊடாக நிலையான வருமானத்தை பெறும் திட்டத்தை வகுத்துள்ளோம்.

2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.2015 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் 2500 ரூபாவை 250 ரூபாவாக குறைதத்து. இந்த குறுகிய தொகையினை பல முன்பள்ளி ஆசிரியர்கள் புறக்கணித்தார்கள்.

குரு அபிமானி செயற்திட்டத்தின் ஊடாக 25000 ஆயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும். அததுடன் அத்துடன் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானிகக்ப்பட்டுள்ளது.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக இடம்பெறுகிறது. தற்போதைய நெருக்கடியான சூழ்நிலைiயை வெற்றிக் கொண்டு மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளோம்.

பாடசாலைகளை மீள திறத்தல் குறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை திறக்கும் சுகாதார பாதுகாப்hன சூழல் உறுதிப்படுத்தப்பட்டவுடன் பாடசாலைகள் விரைவாக திறக்கப்படும்.

போட்டி கல்வியை வழங்கும் ஒரு பாடசாலையாக முன்பள்ளி பாடசாலைகளை மாற்ற வேண்டாம். பிள்ளைகள் குழந்தை பருவத்தை அனுபவிக்க இடமளிக்க வேண்டும். அவர்களின் உலகில் வாழ இடமளியுங்கள். பிள்ளைகளை சிறந்த பிரஜைகளாக்கும் பொறுப்பு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உண்டு என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.