கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால், எதிர்வரும் நாட்களில் பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நேற்று(24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாளொன்றிற்கு சுமார் 2000 முதல் 2200 வரையான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக கொவிட் தொற்றாளர்கள் பதிவாகும் பட்சத்தில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்க வேண்டும் என அவர் தெரிவிக்கின்றார்.
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட கடந்த இரண்டு அல்லது மூன்று தினங்களாக மக்கள் பொறுப்பின்றி செயற்பட்ட விதம் குறித்து அனைவரும் அவதானித்ததாகவும் அவர் கூறினார்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் நாட்களில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாக இருந்தால், கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
Post a Comment