நோயாளர்களுக்கான மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்கும் திட்டம் ஆரம்பம் - விபரங்களுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்.

அரச மருத்துவமனைகளில் பிணி ஆய்வுகளுக்காக (க்ளினிக்) பதிவு செய்யப்பட்ட நோயாளர்களுக்கு தபால் மூலம் மருந்துகளை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவந்துட தெரிவித்தார்.

மேலும், இதுவரை பிணியாய்வுகளுக்காக முகவரிகளை வழங்காத நோயாளிகள் தமது பிணி ஆய்வு நிலையங்களை தொடர்புகொண்டு உரிய முகவரிகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நோயாளிகளின் மருந்துகளை வீட்டுக்கு வரவழைத்துக் கொள்வது தொடர்பான மேலதிக விடயங்களை அறிந்துகொள்ள இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, 072 07 20 720 அல்லது 072 06 06 060 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.