மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து எப்போது ஆரம்பமாகும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தனக்கு கொவிட் செயலணியின் தலைவர் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் பொது போக்குவரத்துக்களை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சில ரயில் சேவைகளையும், சில பஸ் சேவைகளையும் ஈடுபடுத்துவது குறித்து, உரிய தரப்புடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், கொவிட் செயலணியின் அனுமதியுடன் மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக பொது போக்குவரத்து சிலவற்றை இயக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.