அடுத்த வாரங்கள் ஆபத்தானவை! பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சிவப்புக்கொடி.

கடந்து ஒரிரு நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனைகளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண ஆரம்பித்துள்ளதால் ஏதோ ஒரு வகையில் கொரோனா தொற்று சமூகத்திற்குள் சென்றிருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதோடு, இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு திறக்கப்பட்டுள்ளமை குறித்த நேற்று(21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்....

ஒரு மாதத்திற்கு பின்னர் சுகாதார வழிமுறைகளுடன் நாடு திறக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் செயற்பாடுகள் பெரிதும் கவலையளிக்கிறது. எவ்வித சுகாதார வழிமுறைகளையும் மதிக்காது, பல இடங்களில் மக்கள் ஒன்று கூடியதுடன், தேவையற்ற விதத்தில் மக்களின் நடமாட்டமும் காணப்பட்டது.

இந்த நிலைமை தொடர்ந்தால் புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட அதி ஆபத்தான நிலைமைக்கு எதிர்வரும் வாரங்களில் முகம் கொடுக்க நேரிடும் ஆகவே பொறுப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.