பொருளாதார புத்துயிர் மற்றும் வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஸ்தாபகருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
பஷில் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி மற்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோரும் நாடு திரும்பியுள்ளனர்.
துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
பஷில் ராஜபக்ஷ கடந்த மே 12 அன்று அமெரிக்காவுக்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment