காய்கறிகள், பழங்களை மக்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானம்.

நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயிகளின் விளைச்சல்களைக் கொள்வனவு செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பல பிரதேசங்களில் பப்பாளி, வாழை, மரவள்ளி, மரக்கறி மற்றும் பழவகைகள் என்பவற்றை உற்பத்தி செய்திருந்தாலும், அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு வாடிக்கையாளர்களுக்குக் காணப்படும் சிரமத்தினை கவனத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, கொள்வனவு செய்யப்படும் பொருட்களை, பொதுமக்கள் உட்பட கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுவரும் சுகாதார, பாதுகாப்பு பிரிவு ஊழியர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.