அரசாங்கத்தின் அமைச்சரவையில் ரணில்? கலங்கிப்போயுள்ள சஜித் அணி!!

நெருக்கடியில் சிக்குண்டுள்ள அரசாங்கம் அதிலிருந்து விடுபடுவதற்காக ரணில் விகிரமசிங்கவை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற பிரவேசம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

எதிர்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவை பயன்படுத்த அரசாங்கம் முயலக்கூடும். ரணில் விகிரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அதிகம் பேசுகின்றார்.

பெருமளவிற்கு நெருக்கடியில் சிக்குண்டுள்ள அரசாங்கம் அதிலிருந்து விடுபடுவதற்காக ரணில் விக்ரமசிங்கவை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்லது ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் எதிர்கட்சி இரண்டாகும் என அரசாங்கம் கற்பனை செய்யக்கூடும் என நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை இழக்கும்போது இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவது வழமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியை பலவீனப்படுத்தி தன்னுடைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ரணில் விக்ரமசிங்கவை கூட பயன்படுத்தலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை அரசாங்கம் தனது பக்கம் எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர் அனுபவம் உள்ள அரசியல்வாதி, அவருக்கு தனிப்பட்ட இராஜதந்திர தொடர்புகள் உள்ளன, ஆனால் எதிர்கட்சி பலவீனப்படாது என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.