அதிக ஆபத்துமிக்க டெல்டா வைரஸ் திரபு பரவலை முறியடிக்க சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை!

இந்தியாவில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் திரிபினால் பாதிக்கப்பட்ட சிலர் தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பிரதேசத்திலிருந்து வைரஸ் வேறு இடங்களுக்கு வைரஸ் திரிபு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கொவிட் பரவல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த புதிய திரிபு பரவலால் ஏற்படும் பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதற்கமைய, குறித்த திரிபு அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தை தனிமைப்படுத்தி அப்பகுதியில் வசிப்பவர்களிடமிருந்து பீ.சி.ஆர் மாதிரிகளை பெற்று பரி்சோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறே, தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய நபர்களை கண்டறிந்து பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும், அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த டெல்டா திரிபு பரவியுள்ளதா எனக் கண்டறிய விசேட விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்கு தேவையான வளங்களை உடன் வழங்க அவசியமான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.