நாளை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக சற்றுமுன்னர் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகள் ஊடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் அரசாங்கத்தின் விசேட தீர்மானங்கள் குறித்ததாக இந்த உரை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment