அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மற்றுமொரு அதிவிஷேட வர்த்தமானி வெளியானது.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதிகளில் தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தபால் திணைக்களத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு,வெளிநாட்டு முகவரிகளுக்கு பொருட்கள் மற்றும் கடிதங்களை பகிர்ந்தளிக்கும் சேவைகளும் இதன் மூலம் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்நாட்டு, வெளிநாட்டு விரைவு தபால் சேவையும், தபால் நிலையம் ஊடாக மருந்துகளை பகிர்ந்தளித்தல் மற்றும் பணப்பரிமாற்றல் என்பனவும் இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.