கோட்டாபய அரசின் திடீர் தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை கண்டனம்!

“சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் எம்.பி, துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டமை இலங்கையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன் இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.”

இவ்வாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது தந்தையின் கொலையாளியான துமிந்த சில்வாவுக்கு, அநீதியான முறையில் பொதுமன்னிப்பளித்தமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பதிலளிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தே அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.
தனது இளம் பராயம் முழுவதும் கொலைகாரர்களுடன் போராடி பெற்ற நீதி தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக ஹிருனிகா பிரேமசந்ர குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறு அசாதாரணமான முறையில் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பளித்தமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மக்கள் இந்த விடயம் தொடர்பில் புத்திக் கூர்மையுடன் பார்க்கும் தினம் உதயமாகும் என தான் நம்புவதாகவும் அக்கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.