நாட்டில் கொரோனா தீவிரமடையும் நிலை! பிரதமர் பிறப்பித்த உத்தரவு.

நாட்டில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 12 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் விஷேட மருத்துவர்கள் சங்கம் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனை பொறிமுறையால் இந்த அதிகரிப்பை சமாளிக்க முடியாது எனவும் விஷேட மருத்துவர்கள் சங்கம் கூறியுள்ளது. 

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையின் கீழ் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே பிரதமர் இந்த ஆலோசனை வழங்கியதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது, தாதியர்கள் பற்றாக்குறை மற்றும் அவர்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் சுகாதாரத்துறையினர் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இக்கட்டான நிலையை கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற தாதியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.