வெண்ணெய் பொதியில் தமிழ் மொழி புறக்கணிப்பு - முறையிட்டால் அவதானம் செலுத்துவோம்..!

பொண்டேரா நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான எங்கர் வெண்ணெய் உற்பத்தியின் பொதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் முறைப்படுகள் கிடைக்கப்பெற்றால் அது குறித்து அவதானம் செலுத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பிரிவு அறிவித்துள்ளது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழியில் பிரசுரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சர்வதேசத்திற்கு ஏற்றுமதி செய்வதால் சீன மொழியும் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளை அறிந்திராத தமிழ் மக்கள் நுகர்வின் போது சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பில் ஊடகங்கள் நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பிரிவின் பணிப்பாளருக்கு அழைப்பினை ஏற்படுத்தி வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும், முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் அவதானம் செலுத்தப்படும் என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.