பயணத்தடைக்கு மத்தியில் இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்கள்!

பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் இன்று (08) இலங்கையின் சில இடங்களில் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர்.

பிரான்ஸ் தூதரகத்தினூடாக வௌிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டிற்கு வருகைத் தந்துள்ள கடற்படை உறுப்பினர்களில் 101 பேர் யால சரணாலயத்திற்கும் 86 பேர் உடவலவ தேசிய சரணாலயத்திற்கும் 235 பேர் ஹபரணை பிரதேசத்திற்கும் சுற்றுலா செல்லவுள்ளனர்.

பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப் பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன.

பிரான்ஸ் கடற்படையின் 750 உறுப்பினர்களுடன் 02 கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இவ்வாறு வருகைத் தந்துள்ள பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.