பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் முன்னெடுக்கக்கூடிய பணிகள் தொடர்பான விபரம் வெளியானது.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 வரை நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று நேரத்துக்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

எவ்வாறாயினும், பயணத் தடை காலப்பகுதியினுள் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத் தொழிற்சாலைகள், முக்கிய கட்டுமான தளங்கள், வாரந்த சந்தைகள், உர உற்பத்தி நடவடிக்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.