பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் பிரதேசத்தில் இன்றைய தினம் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த செயற்பாட்டை பாராட்டியும், கண்டனம் வெளியிட்டும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவேற்றப்படுகின்றமை காணக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில், இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சகுனநாதன் தனது ட்விட்டர் கணக்கில் இது சித்திரவதைச் சட்டத்தின் கீழ் குற்றம் என இராணுவத்தினர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
Post a Comment