எரிபொருள் விலை குறைக்கப்படுமா? சற்றுமுன்னர் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்.

எரிபொருள் விலையை குறைக்க பசில் ராஜபக்ஷவின் தலையீடு தேவையில்லை என்று அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்துள்ளார்.

சற்றுமுன்னர் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்கு பதில் அளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்... 

வேறு வழியில்லை என்பதே எரிபொருள் விலையின் அதிகரிப்புக்கு காரணம். பசில் ராஜபக்ஷ அமைச்சரான பிறகு எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று தெரிவிக்கும் கருத்து அரசாங்கத்தின் கருத்து அல்ல, ஒரு சில எம்.பி.க்களின் கருத்து மட்டுமே. எரிபொருள் விலை உயர்வால் அரசாங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் மக்களின் துன்பங்களை உணர்கிறார்கள், எனவே எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்பது முழு அரசாங்கத்தின் கருத்தாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.