எரிபொருள் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒரு ரூபாவிலேனும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென்பதை தௌிவாக கூறுவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இதுவரை பொதுமக்களுக்கு இயலுமானவரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment