முழங்காலில் நிக்க வைத்த சம்பவம் தொடர்பில் இராணுவத் தளபதியின் அதிரடி உத்தரவு.

பிரயாணத் தடையினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏறாவூர் பிரதேசத்தில் சிலரை முழங்காலில் நிற்க வைத்த சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய்கள் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இராணுவம் விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் உத்தரவின் பிரகாரம் இந்த இடைநிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், குறித்த இராணுவ வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் நிக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று (19) சனிக்கிழமை வைரலாகியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.