கால நிலை குறித்து நாட்டில் பல இடங்களுக்கு சிவப்பு எச்சசரிக்கை!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (குறிப்பாக மேற்கு, சபராகமுவா மற்றும் மத்திய மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில்) நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, 150 மில்லி மீற்றருக்கு அதிக வீழ்ச்சி இன்று சில இடங்களில் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை:-

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹல மற்றும் பாலிந்தநுவர, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, குருவிட்ட, கலவான மற்றும் எஹெலியகொட, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட பிரதேசங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை:-

களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக குறித்த ஆறுகளின் கரையிலுள்ள சில பிரதேசங்களில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.