கண்டியில் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு முரணாக இயங்கிவந்த மாணவர் விடுதி சுற்றிவளைப்பு!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, கண்டியில் நடத்திச் செல்லப்பட்ட மாணவர் தங்குமிட விடுதி ஒன்று, சுகாதாரத்துறையினராலும், காவல்துறையினராலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

கண்டி - கட்டுகஸ்தோட்டை - ரணவன வீதிப் பகுதியில், குறித்த மாணவர் தங்குமிட விடுதி இயங்கியுள்ளது.

அந்த விடுதியில் இருந்த மாணவர் ஒருவர், கொவிட்-19 தொற்றுறுதியாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தங்குமிட விடுதியில் இருந்த 50 மாணவர்களும், எட்டு நிர்வாக அதிகாரிகளும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.