எரிபொருள் விலை உயர்வு! எதிர்க்கட்சி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

எரிப்பொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து குருநாகல் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல அவர்களின் ஏற்ப்பாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்­தினம் நள்ளிரவு முதல் அரசாங்கம் எரிபொருட்களுக்கான விலையினை அதிகரித்துள்ளது.

இதனால் நாட்டு மக்களின் மீது பொருளாதார சுமை ஏற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.