பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படுமா? - இராணுவத் தளபதி தெரிவித்த விடயம்

நாட்டின் கொவிட் பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தி, கொவிட் அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் என கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போது காணப்படும் பரிந்துரைகளின்படி, அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை அமுலாக்கப்பட்டிருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அந்த பகுதிகளில் கொவிட் பரவும் அபாயம் காணப்படுவதால் மக்களுக்கு நடமாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.