கடுமையாகும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு…!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயண நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்க முயற்சிப்பவர்கள் தொடர்ந்தும் திருப்பியனுப்பப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு மாகாண எல்லைகளைக் கடந்து பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு கடந்த 25 ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதிலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.