ஞானசார தேரருக்கு ஏற்பட்ட சிக்கல்! கைவிரித்த அத்துரலியே ரத்ன தேரரின் கட்சி

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் கட்சி மட்டத்தில் எவ்வித தீர்மானத்தையும் எடுக்க முடியாது.

ஞானசார தேரரும், அத்துரலிய தேரரும் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்காக செய்துக் கொண்ட ஒப்பந்தங்கள் ஏதும் கட்சிக்கு தெரியாது என அபே ஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.

அபேஜன பல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் குறித்து எழுங்துள்ள முரண்பாடு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த வருடம் இடம் பெற்ற பொதுத்தேர்தலில் அபேஜனபல வேகய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளுக்கு அமைய ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஒதுக்கப்பட்டது.

இந்த ஆசனத்திற்கு அபேஜன பல வேகய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் விமல் திஸ்ஸ தேரர், அபே ஜன பல கட்சியின் வேட்பாளர்களான தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் ஆகியோர் உரிமை கோரினார்கள்.

ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் மாதக் கணக்கில் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்பட்டன. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் நாடாளுமன்றிற்கு நேரடியாக செல்வதில் சட்ட சிக்கல் காணப்பட்டது.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒரு தேசிய பட்டியல் ஊடாக அத்துரலியே ரத்ன தேரர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் பதவி பிரமாணம் செய்தார்.

ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆகவே அத்துரலியே ரத்ன தேரர் சுயமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

எக்காரணிகளுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாத காலத்திற்கு மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது என ஞானசார தேரர் தெரிவிதர்திருந்தார்.

ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இவ்விருவரும் செய்துக் கொண்ட ஒப்பந்தம் ஏதும் கட்சிக்கு தெரியாது.

ஞானசார தேரர், அத்துரலியே ரத்ன தேரர் இருவருக்குமிடையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விடயத்தில் அபே ஜன பல வேகய கட்சியால் எவ்வித் தீர்வையும் வழங்க முடியாது .

இருவரும் பேசி இப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.