பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு2020 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியாக மாத்திரம் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (24) முதல் எதிர்வரும் மாதம் 10ம் திகதி வரை மீள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியாக அனுப்ப முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு அதிபரின் பரிந்துரை அவசியமற்றது என அவர் கூறியுள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளம் வழியாகவும், பரீட்சைகள் திணைக்களத்தின் Exams Sri Lanka-DOE என்ற கையடக்கத் தொலைபேசி ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.